• Sep 22 2023

கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் நெருங்கிய தோழியா?- இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் வேட்டையன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் கவின். இதனைத் தொடர்ந்து சில ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்த இவர் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.டைட்டிலல் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


அதுமட்டுமின்றி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியாவையும் காதலித்து வந்தார். இருப்பினும் ஷோவை விட்டு வெளியேறியதும் இருவரும் பிரிந்து விட்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும், இருவரும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் லாஸ்லியாவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவினின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி கவினுக்கும் அவரது நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிட்டிற்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மோனிகா டேவிட், லாஸ்லியாவின் தோழி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் லாஸ்லியாவிடம் ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி இருக்கிறாராம். 


லாஸ்லியாவும், மோனிகா டேவிட்டும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement