தமிழ் சினிமாவின் முரட்டு சிங்கிளாக பார்க்கப்பட்ட பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற உள்ளது என அவரது திருமண அழைப்பிதழ் போட்டோவானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல கிசு கிசுக்களும் எழுந்த நிலையில் இவரது அண்ணனும் இயக்குனருமான வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் "இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும். பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? -சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா? இதை எல்லாவற்றையும் விட "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்! இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! REW. THE GOAT அப்டேட் விரைவில் இப்படிக்கு. பாசத்துடன் VP" இவ்வாறு தனது X தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
                              
                             
                             
                            _666004c44dca0.jpg) 
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!