• Apr 28 2024

விஜய் அடுத்தபடியாக லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் யாருக்கு தெரியுமா..? வெளியானது தகவல்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிக்கிறார்.அத்தோடு சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இவ்வாறுஇருக்கையில், ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், லியோ படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக யார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பற்றி தான்.

நாம் அனைவரும் சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற நடிகர்கள் தான் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லையாம்.

மேலும்  இப்படத்தில் சிங்கம் ஒன்றை நடிக்க வைத்துள்ளார்களாம். விஜய்க்கு அடுத்தபடியாக இந்த சிங்கம் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிங்கத்தை அனிமேஷன் செய்ய ரூ. 15 கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த சிங்கத்தின் காட்சி வெறித்தனமாக இருக்கும் என கூறப்படுகின்றது..


Advertisement

Advertisement

Advertisement