• Sep 21 2024

29 ஆண்டுகள் கழித்து உருவாகவுள்ள ஜென்டில்மேன் 2 திரைப்படம்- அட இயக்குநர் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று கூறப்படும் நடிகர் தான் அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஜென்டில்மேன். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கியிருப்பதோடு கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது 29 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அறிவிப்பை தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குநர் யார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

ஜென்டில்மேன் 2 படத்தில் இயக்குநராக ஏ கோகுல் கிருஷ்ணா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement