• Jan 18 2025

யார் இந்த சூப்பர் சிங்கர் மானசி... இவர் ஏற்கெனவே ஒரு ஷோவில் டைட்டில் வின்னராக இருந்திருக்காராம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் மானசி. இவரின் முழுப்பெயர் மானசி.ஜி.கண்ணன். இவரின் அப்பா பெயர் கண்ணன். இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அதுமட்டுமல்லாது தற்போதும் சென்னையில் தான் வசித்து வருகின்றார்.


மானசி நன்றாகப் படிக்கக் கூடிய ஒருவர். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்னாடி 2017 இல் 'DD பொதிகை' என்ற சேனலில் நடந்த மியூசிக் ஷோ ஒன்றி டைட்டில் வின்னராக இருந்திருக்கின்றார். அதில் 1லட்ஷம் ரூபாய் பணத்தை வெகுமதியாயும் பெற்றிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது சங்கரா என்ற டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரிலும் இவர் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார். அத்தோடு நிறைய மேடைகளில் பாடியும் இருக்கின்றார்.


மேலும் 'சிங்கார வேலனே' என்ற பாடலை ஒரு மியூசிக் குரூப்பில் திருவண்ணாமலையில் பாடி இருக்கின்றார். அத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8ஆவது சீசனில் கலந்து கொண்டு இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வாகி இருக்கின்றார்.


மானசி தற்போது உயர் கல்வியைத் தொடரும் மாணவியாக கல்சுவேத்திரா என்ற ஸ்கூலில் படித்து வருகின்றார். மேலும் நா.முத்துக்குமார் எழுதிய பாடலான 'சென்னை செந்தமிழ்' என்ற பாடலை மாஸிப் பண்ணி தனது யூடியூப் வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது தற்போது பல பிரபல இசையமைப்பாளரின் இசையில் பல பாடல்களை பாடி வெளியிட்ட வண்ணம் தான் இருக்கின்றார். இவரின் இசைக்கும், இனிமையான குரலிற்கும் மயங்காதவர்கள் இல்லை. மானசி குரலில் மட்டுமன்றி தன்னுடைய அழகினாலும் பல இளைஞர்களைக் கொள்ளை அடித்திருக்கின்றார்.


இதனால் இவரை ஒரு பாடகியாய் பார்த்த மானசி ரசிகர்கள் இவர் ஒரு நடிகையாகவும் மாற வேண்டும் எனக் கூறி வருகின்றனர். மானசி தன்னுடைய வாழ்க்கையில் இன்னும் இன்னும் எந்தளவு உயரமான இடத்திற்கு செல்லப் போகின்றார் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement