• Apr 20 2024

நடிகை அசினின் காதல் கதை இது தானா..பலரும் அறிந்திடாத முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை அசின் யார் என்பதை பார்ப்போம் வாங்க...

பலரது மனதையும் கவர்ந்த அசின் அக்டோபர் 26ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.கேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு சைரோ மலபார் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார்.

அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.


அmத்தோடு தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.

இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் சரளமாக பேசுவார்.இவர் ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.இவர் 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில்  என்றியானவர்.அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். மேலும் அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.


மேலும்  அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.இவர் அஜித் விஜய் என பல நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார்.

"கஜினி" (2005), "வரலாறு" (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தனக்கென ஒரு இடத்தை பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான "கஜினி"யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால் பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். 


இவ்வாறுஇருக்கையில் ஜனவரி 18, 2016 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார்.அதாவது  மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் காதலை சேர்த்து வைத்ததே நடிகர் அக்ஷய் குமார் தானாம்.அதாவது அக்ஷய் குமாருடன் நெருங்கிய நண்பர் தானாம் அசினின் கணவர்.அக்ஷய் குமாரின் சூட்டிங் ஸ்பாட்டில் ராகுல் சர்மாவும் இருப்பாராம்.அப்பொழுது தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாம்.


அசினுக்கு 2017ஆம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது.இவர்கள் தற்போது மும்பையில் உள்ளார்கள்.பெரிதும் சமூகவலைத்தளங்களில் ஆர்வம் காட்ட அசின் தனது மகளின் பிறந்த தினத்திற்கு மட்டும் அவருடைய புகைப்படத்தை இட்டு வாழ்த்து கூறுவார்.இவ்வாறு திருமண வாழ்க்கைக்குள் இணைந்ததும் இவர் படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இதனை எண்ணி பலரும் கடும் சோகத்திலே உள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement