• Jan 15 2025

என்ன பிக் பாஸ் கூப்பிட்டாங்க! நான் முடியாதுனு சொல்லிட்டேன்! யார் அந்த இளம் நடிகை?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்க இருக்கிறது. 8வது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே நேரத்தில் கமலுக்கு பதில் தொகுப்பாளராக வரப்போகும் பிரபலம் யார் எங்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.


நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் என பலரின் பெயர்கள் அடிபட்டு கொண்டு இருக்கிறது. தற்போது வெளியான வாழை படத்தில் நடித்த இளம் நடிகை திவ்யா துரைசாமி தான் பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறி இருக்கிறார்.


நேர்காணல் ஒன்றில் "நான் ரொம்ப சீரியஸ் ஆன ஆளு. ஜாலியா பேசுனா ஜாலியா பேசுவேன். இல்லனா சீரியஸாக தான் இருப்பேன். அது எனக்கு செட் ஆகாது. 100 நாள் ஒரே வீட்டில் என்னால் இருக்க முடியாது. அதனால் பிக் பாஸ் கூப்பிட்டபோது முடியாது என கூறிவிட்டேன்" என அவர் தெரிவித்து இருக்கிறார். இதன் பின்னர் இன்னும் பிக் பாஸ் வீட்டுக்கு யார் யார் வரப்போகிறா என்ற தகவல் விரைவில் வெளியாகும்.  

Advertisement

Advertisement