• Nov 06 2024

கெனீஷா பிரான்சிஸ் என்பவர் யார்? அவரிடம் இத்தனை திறமைகள் உள்ளனவா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் ஜெயம் ரவி வாழ்க்கையில் தற்போது புயல் வீச ஆரம்பித்துள்ளது. தனது மனைவியை விவாகரத்து செய்த ஜெயம் ரவி, தற்போது மும்பையில் அடுத்த பட வாய்ப்புகளை தேடி பயணித்து வருகின்றார்.

மேலும் ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்கு பாடகி  கெனீஷா பிரான்சிஸ் காரணம் என சர்ச்சை எழுந்தது. ஆனால் அதற்கு பின்பு ஜெயம் ரவி வழங்கிய பேட்டியில் அவர் ஒரு பாடகி மட்டுமில்லை மனநோயாளிகளை குணப்படுத்துபவர் என்று உண்மையை உடைத்து இருந்தார். அதேபோல  கெனீஷாவும் ஜெயம் ரவி தனக்கு வாடிக்கையாளர் என்ற வகையில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது  கெனீஷா பிரான்சிஸ் என்பவர் யார் அவரைப் பற்றிய விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை பற்றி விரிவாக பார்ப்போம்.

அதன்படி பாடகி, டான்சர், ஹீலிங் தெரபிஸ்ட் என பல திறமைகளை கொண்டவர் தான்  கெனீஷா பிரான்சிஸ். கென்யாவில் பிறந்த இவருக்கு ஆங்கிலத்தில் மட்டும் இல்லாமல் தமிழில் பேசுவதும் பாடுவதும் சகஜமாக காணப்படுகிறது.

இவர் ஒரு தமிழ் பெண் ஆவார். இவரின் அப்பா ஒரு தமிழர். ஆனால் அம்மா ஆப்பிரிக்கர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். கெனிஷாவை போலவே அவர்களது பெற்றோரும் பாடகர்களாம். இதனால் கெனிஷாவுக்கும் இசை மீது ஆர்வம் இயற்கையாகவே அமைந்துவிட்டது.


பாட்டு பாடுவதில் மட்டுமில்லாமல் லத்தில் நடனமும் அடக் கற்றுக்  கொண்டுள்ளார்.அவருக்கு 8 வகையான லத்தின் நடனம் தெரியுமாம். அதன் பின்பு பாடல் பாடிக்கொண்டே நடனம் ஆடவும் தொடங்கியுள்ளார். ஜிம் போவது, வியக்க வியக்க வொர்க் அவுட்  பண்ணுவது என்பதில் தனக்கு விருப்பமில்லை நடனம் ஆடுவது தான் எனது உடற்பயிற்சி எனக் கூறியுள்ளார்.

அத்துடன் ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற ஆறு மொழிகளில் பாடிக் கொண்டே நடனம் ஆடுவது தனக்கு பிடித்தமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ள கெனிஷா, ஸ்பிருச்சுவல் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சை மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற சிக்கல்களிலிருந்து குணமடைய சிகிச்சை அளித்து வருகிறார். இதன் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தியுள்ளார் கெனிஷா.

இறுதியாக சனிக்கிழமைகளில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் பேசுவதாகவும் குறித்த பேட்டியில் தன்னை பற்றி கூறியுள்ளார்.




 

Advertisement

Advertisement