• May 20 2024

நம்ம கலக்க போவது யாரு அறந்தாங்கி நிஷாவா இது?- ரொமான்ஸில் சும்மா கலக்கிறீங்க அக்கா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அறந்தாங்கி நிஷா. இந்த ஷோவில் இவருடைய டைமிங் காமெடி மற்றும் திறமையான தமிழ் பேச்சு என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


இதனை அடுத்து பல காமெடி நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வந்த இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகவும் அறிமுகமாகினார்.இது தவிர பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்குபற்றி இருந்தார்.


இது தவிர மாரி 2 ,கலகலப்பு 2, ஆண் தேவதை, சீமராஜா, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.இது தவிர சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது தனது கணவருடன் எடுத்த ரொமாண்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement