• Sep 30 2023

என்னது...ஜெயிலர் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தச் சூழலில் மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். தயான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் ஆகஸ்ட் பத்தாம் தேதி ரிலீஸாகும் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது .

இந்நிலையில் மலையாள ஜெயிலர் படக்குழு புதிய முடிவை எடுத்திருக்கிறது .அதன்படி படத்தை ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது. என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement