• Sep 22 2023

அர்ஜுனின் உண்மை முகத்தை கிழிக்க கோதை போட்ட பிளான்- அதிர்ச்சியில் உறைந்த நடேசன்- சரஸ்வதியை கிண்டலடித்த அர்ஜுன்

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதி ஆதாரம் காட்டியும் நம்பாத கோதை அவரைத் திட்டி அனுப்பி விடுகின்றார். பின்னர் வீட்டுக்குள்ளே எல்லோரும் வந்ததும் ராகினி தமிழ் தான் கூடாதவன் என்று நினைச்சேன் ஆனால் அந்த சரஸ்வதி அதை விட மோசமாக இருக்கிறா என்று கண்டபாட்டுக்குத் திட்ட வசு, தமிழ் மாமா எதுக்கு ஒரு ஆதாரத்தை வைச்சு கத்தியால் குத்தனும் என்று கேள்வி கேட்கின்றார்.


இவ்வாறாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடக்கின்றது. இடையில் நடேசனும் தமிழுக்கு ஆதரவாகப் பேச வர கோதை அந்த சரஸ்வதி இனிமேல் இங்க வரக்கூடாது. பணத்தை வைச்சு இப்பிடிப் பண்ணுறாங்க மாப்பிள்ளை மேல எந்தத் தப்பும் இல்லை என்று தெரிது. மாப்பிள்ளை நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.

இதனை அடுத்து வசுவும் அர்ஜுனின் நண்பனும் நமச்சியும் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் அர்ஜுன் சரஸ்வதி உண்மையைச் சொல்லியும் யாரும் நம்பலையே என்று சொல்லி நக்கலடிக்கின்றார். அத்தோடு சரஸ்வதியிடம் அடுத்து ஏதாவது மொக்கை பிளான் போடுங்க போங்க என்று கிண்டல் செய்கின்றார்.

 மறுபுறம் நடேசன் கோதையிடம் அர்ஜீன் மேல தான் தப்பு இருக்கு என்று தெரியுது, எதுக்காக நீ அவனுக்காக சர்ப்போட் பண்ணி பேசினி என்று கேட்க கோதை அர்ஜுன் தான் தப்பு என்று எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு,இனிமேல் அவன் டூட்டில போய் தான் அவனோட முகத்தைக் கிழிக்கனும்,இனி நானே களத்தில இறங்கி உண்மை என்ன என்று கண்டு பிடிக்கின்றேன் என்று சொல்கின்றார்.


அதே போல அர்ஜுனும் கோதை ஏதோ பொடி வச்சு தான் பேசின மாதிரி இருக்கு,அவங்கள நம்பக் கூடாது எல்லோரும் அவங்க கிட்ட ஜாக்கிரதையாக இருங்க என்று சொல்கின்றார். பின்னர் இரவு ஆனதும் தமிழ் சரஸ்வதியிடம் எதுக்காக உமாபதி சேரிடம் பணம் வாங்கி இப்பிடிப் பண்ணின என்று கேட்கின்றார். அப்போது சரஸ்வதி உங்க மேல தப்பு இல்லை என்று கட்டாயம் நிரூபிக்கனும் என்று சொல்ல தமிழ் அது எல்லாம் ஒன்றும் வேணாம் நான் சொல்லுறதை கேள் அவங்க ஏதாவது பண்ணிட்டு போகட்டும் என்று சரஸ்வதியை கூல் பண்ணுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement