• May 19 2024

டி. இமான் கூறுவது எல்லாமே பொய்- ஆதாரத்துடன் கேஃசை ஜெயிச்ச அவருடைய முன்னாள் மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் டி . இமான். இவர் இறுதியாக அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பல பாடல்களுக்கு இசையமைத்து வரும் இவர் அண்மையில் பல சர்ச்சைகளில் சிக்க வந்தார்.அதாவது இவரது முதல் மனைவியான மோனிகா தன்னுடைய குழந்தைகளான ப்ளாஸிக்கா ,வெரோனிக்கா ஆகியோருக்காக போலி கடவுச் சீட்டை தயரித்து வருவதாக புகார் அளித்திருந்தார்.

இது எல்லாமே பொய் என மோனிகா தரப்பில் ஆதாரப்படுத்தியுள்ளார். அதாவது பிள்ளைகள் இருவருமே என்னுடன்தான் இருக்கின்றார்கள் அவங்களுக்கு நான் பொய்யான கடவு சீட்டு தயாரிக்கவே இல்லை , ஏற்கனவே தயார் படுத்திய கடவுசீட்டுத்தான் அவர்களிடம் உள்ளது என்றும் இமான் பொய்யான தகவலையே கொடுத்துள்ளார் என வாதாடி ஜெயித்துள்ளார் .

மேலும் மோனிக்கா இமான், குழந்தைகள் பற்றி என்னிடம் கேட்பதே இல்லை . அவர் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்குவதும் இல்லை என பதிவிட்டுள்ளார் . அத்தோடு பாஸ்போர்ட் இருக்கும் பொழுது ஏன் பொய்யான பாஸ்போர்ட் செய்ய வேண்டும் . இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர் பொய்யான வழக்கு தொடர்கிறார் . என் பிள்ளைகளை என்னிடம் இருந்து பிரிப்பதற்காகவே இவர் இவ்வாறு செய்கின்றார் என இமான் மீது மோனிக்கா குற்றம் சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement