• Dec 03 2024

பற்றியெரியும் பிக்பாஸ் வீட்டைப் பார்த்து ரசிக்கும் பிரதீப்! என்ன நக்கல்யா உனக்கு..! குவியும் கமெண்ட்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஸோ தான் பிக்பாஸ் சீசன் 7. எனினும் தற்போது பிரதீப் விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் காமெடி வீடியோ, மீம்ஸ் என்பவற்றை பகிர்ந்து வருகின்றார். அதன்படி, தற்போது  பிக்பாஸ் வீட்டை வைத்து பிரதீப் ஆண்டனி போட்டிருக்கும் மீம் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.


பிக்பாஸ் சீசன் 7 இல் இறுதிவரை சென்று டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நபர் தான் பிரதீப் ஆண்டனி. அதன்படி, நான் இப்படித்தான் இருப்பேன் இதற்காகத்தான் விளையாடுகிறேன் என்று ஓபனாக பேசிவிட்டே விளையாட செய்தார்.  

ஆனாலும் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கமல் ஹாசனிடம் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் பிரதீப் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு, 'அவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கதவை திறந்து வைத்துக்கொண்டு கழிவறை செல்கிறார்' போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட்டது.


இதனைத் தொடர்ந்து அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் விமர்சனத்தை  பெற்று வருகின்றது.

ஆனாலும், பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனாவும், விசித்திராவும் பிரதீப் வீட்டை விட்டு சென்ற பிறகும் அவருக்கு சப்போர்ட்டாக பேசி வருகின்றனர்.


இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடு ஒன்று  எரிவதை கண்டு சிறுமி சிரிக்கும் மீமை போட்டிருக்கிறார். அது பிக் பாஸ் வீடாகவும் அச் சிறுமி பிரதீப் ஆகவும் எடிட் செய்யப்பட்டு  தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. 

Advertisement

Advertisement