• May 19 2024

10 ரூபா சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை துலைத்த பிரபல நடிகை-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் லீலாவதி.இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.என்.டி ராமாராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் நடித்து வந்த நடிகை லீலாவதி அவர்கள் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

இவர் பழம் தோட்டம், நெற்பயிர், காய்கறிகள், சாகுபடி உடன் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார், தன்னுடைய மகனுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் .

இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் .அதில் அவர் கூறியிருந்தது; மங்களூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமம் தான் என்னுடைய பூர்வீகம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். நல்லா படிக்கணும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் குடும்ப வறுமையால் என் வாழ்க்கையை யூகிக்க முடியாத வகையில் மாறிவிட்டது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் மொத்த குடும்பமும் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று என் பெற்றோர் என்னை விட்டு வேலைக்கு அனுப்பி இருக்க மாட்டார்கள்.

விதியின் விளையாட்டு நான் மட்டும் தப்ப முடியுமா? வீட்டு வேலையில் மாதம் எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் .பின் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பத்து ரூபாயாக என்னுடைய சம்பளம் அதிகமானது. அதுக்கு நிறைய போட்டிகளையும் பொறாமைகளையும் எதிர்கொண்டேன். நாடகத்தில் நடிக்கிறது. புரொடக்ஷன் வேலை என்று நாள் முழுக்க ரொம்பவே சிரமப்பட்டேன்.அப்போ நான் சின்ன பொண்ணு என்பதால் சிரமம் பார்க்காமல் வேலை செய்தேன்.

வசனங்களை மனப்பாடம் செய்து தடுமாற்றம் இல்லாமல் பேசி நடித்ததால் நாடகங்களில் எனக்கு ஹீரோயினி வேடம் கிடைத்தது. பின் சில காலங்களில் எனக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. லீலா என்ற பெயரை சினிமாவுக்காக லீலாவதி என மாற்றிக் கொண்டேன்.

இவ்வாறு உங்களுடைய சினிமா அனுபவம் குறித்து கேட்டபோது நடிகை கூறியதாவது; நடிகையாக புகழ்பெற வறுமையில் இருந்து மேலே போகணும் என்கின்ற ஆசையில் சினிமாவுக்காக பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஹீரோயினியாக நிறைய படங்களில் நடித்து இருந்தேன். பின் வாய்ப்புகள் குறையத் தொடங்கியவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்த பல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தேன். கன்னட சினிமா உலகில் என்னுடைய படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது.

ஆனால் எனக்கு பெரிதாக சம்பளம் கொடுக்கவில்லை. 1970களுக்குப் பிறகு தான் எனக்கு மொத்தமாகவே பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்தார்கள். அந்த நேரத்தில்தான் அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க இயக்குநர் பாலசந்தர் சார் என் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதை காப்பாற்ற வேண்டும் என்று பயங்கரமாக மினக்கெட்டு நடித்துக் கொடுத்தேன். பாலச்சந்தர் மட்டும் இல்லை என்றால் என்ன தமிழ் சினிமாவில் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். அதுமட்டுமில்லாமல் என்னுடைய மகன் வினோத் ராஜ் இவரும் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தபோது இவரும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வகுப்பு தோழர்கள். தற்போது என் மகனுடன் இணைந்து விவசாய வேலைகளை செய்து வருகிறேன்.

சினிமாவும் விவசாய வேலையை என் தாய் என்னை இப்ப வரைக்கும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இது தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. அதனால் தான் சினிமா போதும் என்று முடிவெடுத்தவுடன் விவசாயத்தில் இறங்கி விட்டேன். என்னுடைய வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்ற மாதிரி நாங்கள் வசிக்கும் இடம் கிடைத்தது. தரிசாக கிடந்த நிலத்தை இப்போது செழிப்பான தோட்டமாக மாற்றியிருக்கிறோம். அதற்கு பிரதமர் தேவகவுடா முன்னாள் மத்திய அமைச்சர் கர்நாடக முன்னாள் முதல்வர் பலரும் விவசாய வேலைகளை பாராட்டி இருந்தார்கள். நான் இருக்கும் சொலதேவனஹல்லி மலைப்பகுதி இங்கு பழங்குடி மக்கள் வாழும் இடம்.

மற்றும் இங்கு 50 லட்சம் மதிப்பிலான மருத்துவமனையை கட்டியிருக்கிறோம். கூடிய விரைவில் அந்த பணிகள் முடிவடையும் இதனால் மக்களுக்கு அரிதாக மருத்துவ வசதிகள் கிடைக்கும். ஒருவர் நிலத்தை தானமாக கொடுத்தார். மருத்துவர்கள் உட்பட போதுமான ஊழியர்களை நிஜமித்து கர்நாடக அரசு ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும். நானும் என் மகனும் எங்க தேவைக்கு மீறி என்னதான் கொண்டு போகப்போறோம்? ஒண்ணுமில்லை. மக்களோட அன்பால் தான் நல்ல நிலைக்கு உயர்ந்தேன். அதனால் என் தேவைக்கு மீறிய செல்வத்தை மக்களுக்கு கொடுக்கிறது தான் சரியாக இருக்கும் என்று அதை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement