• Jan 15 2025

யூடியூபில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த வாட்டர் பாக்கெட் பாடல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நாளுக்கு நாள் பல சாதனைகளை படைத்து வருகின்றது. அதாவது ராயன் திரைப்படம் 100 கோடி வசூலை சாதனை படைத்ததாகவும் இந்த படத்தின் திரைக்கதை புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் வைக்கத் தேர்வானது எனவும் இதன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் விருந்தும் கொடுத்து கொண்டாடியுள்ளார்.

அதேபோல ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஓ ராயா பாடலை தனுஷ் மற்றும் ஏ ஆர் ரகுமான் பாடி நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், ராயன் படத்தில் இடம் பெற்றுள்ள வாட்டர் பாக்கெட் பாடல் யூடியூப்பில் மட்டும் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

ராயன் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் இரண்டாவதாக ரிலீஸ் செய்யப்பட்ட பாடல் தான் வாட்டர் பக்கெட் பாடல். இந்த பாடல் லிரிக் வீடியோவாக ரிலீஸ்ஆனபோதே நல்ல வரவேற்பை பெற்றது.




 

Advertisement

Advertisement