• Jan 18 2025

ஜோவிகாவுக்கு கொளுத்திப்போட்டு அனுப்பிய வனிதா? அர்ச்சனாவுக்கு பேராபத்து! பிக் பாஸில் நடப்பது என்ன?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி மேலும் விறுவிறுப்பாக  நகர்கின்றது. இதில் டைட்டில் வின்னர் யார் என்பதும், PR டீம் பற்றிய தகவல்களும் இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

அதன்படி பிக் பாஸ் வீட்டிற்குள் வினுஷா, அக்ஷயா, விக்ரம், அனன்யா, ப்ரொவோ ஆகியோரின் வரிசையில், இன்றைய தினம் ஜோவிகா வந்துள்ளார்.


இவ்வாறு பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள ஜோவிகா, முதலில் அர்ச்சனாவை அழ வைத்த செய்தி சமூக வலைத்தளங்களில் புகைந்து வருகின்றது.

அதே நேரத்தில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை ஒன்று திரட்டிய வனிதா, அண்மையில் புத்தாண்டு தினம் அன்று வீட்டில் வைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.


இதன்போது, பிக் பாஸில் மாயாவை ஜெயிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று இருக்கலாம் எனவும், அதன் காரணமாகவே தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஜோவிகா, மாயாவுக்கு பலத்த சப்போர்ட் பண்ணுவதாகவும், இதுவே அவருக்கு அனுப்பப்பட்ட கோட் வேர்ட் ஆகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

அதன்படி, அர்ச்சனாவை மட்டம் தட்டி, அர்ச்சனாவுடன் ஏன் பேசுறீங்க என  மாயாவை திட்டுகிறார் ஜோவிகா. இதற்குக் காரணம் வெளியில் அவரை நெகட்டிவ் ஆக காட்டப்படுகின்றமை தான். மேலும் பேசிய ஜோவிகா  மாயாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.


Advertisement

Advertisement