பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையில் பல்வேறு சர்ச்சைககளுக்கு உள்ளாகியுள்ளது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களை மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் பெயரும் தாறுமாறாக கிழிக்கப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை விட Youtube சேனல்களை வைத்து நடத்தும் யூட்யூபர்ஸ் இடையே ஏகப்பட்ட குழப்பங்கள் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில், 5 வயது சிறுமியின் பிரச்சனையில் ஆரம்பித்த சச்சரவு ஒன்று, தற்போது பூகம்பமாக வெடித்து போலீசில் புகார் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ரிவ்யூ செய்யும் யூடியூப்ஸ்கள் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தின் உச்சத்தில், பிரபல பிக் பாஸ் ரிவ்யூவரான ஜோ மைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை வழங்கியுள்ளார்.
குறித்த புகாரில், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு தன்மீது வெறுப்பை உண்டாக்கும் வகையிலும், தனக்கு எதிராக சதி செய்து வருவதாக பிக் பாஸ் சீசன் நான்கில் பங்கு பற்றிய போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட மேலும் சில யூடியூப்ஸ்கள் மீது புகார் அளித்துள்ளார்.
அதன்படி, இமாத்தின் ஐந்து வயது மகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டதாக தன் மீது பொய் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளதாக ஜோ மைக்கல் புகாரில் கூறியுள்ளதோடு, இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் போலீசாருக்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்பிற்கு எதிராக ஜோ மைக்கல் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், பிரதீப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட முக்கிய யூடியூப்ஸ்கள் ஜோ மைக்கலுக்கு எதிராக செயற்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!