• May 20 2024

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா? - ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. கடந்த 3 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் 4-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்‌ஷன் தொடர்கிறார்.

இந்த சீசனில் ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஆண்ட்ரியன், ராஜ்ஜயப்பா, விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

20 எபிசோடுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிஷோர், காளையன், ராஜ்ஜயப்பா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரம் இம்யூனிடி டாஸ்க் மைம் கோபி வென்றதால் அவர் இந்த வாரம் சமைக்கவில்லை.

விசித்ரா, செரின், சிவாங்கி, ஸ்ருஷ்டி, விஷால் ஆகியோருக்கு இடையில் போட்டி நடந்தது. அதில் கொஞ்சம் குறைவான வாக்குகள் பெற்று விஜே விஷால் எலிமினேட் ஆனதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் வெளியேறிய தகவல் கேட்டு ரசிகைகள் கொஞ்சம் வருத்தம் என்றே கூறலாம்.



Advertisement

Advertisement