• May 13 2024

நடிகர் மனோபாலாவின் கணக்கு ஹக் செய்யப்பட்டதா? -கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத்திறன் கொண்டு விளங்குபவர் நடிகர் மனோபாலா. இவர் பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66வது படத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவு செய்து அதில் சினிமா அரசியல் கருத்துக்களை பற்றியும் தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களையும் தெரிவித்து ரசிகர்களுக்கு கமெண்ட் செய்து வருவார்.

இந்நிலையில் தற்போது இவரின் டுவிட்டர் கணக்கு பக்கத்தில் திடீரென அடுத்தடுத்து ஆபாச படங்கள் பதிவானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை உடனடியாக டெலிட் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர் இதற்கு பதில் அளித்த அவர் தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து விடப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement