• May 13 2024

ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சைதான்… அதை உடைக்கும் வகையில் அவர் செய்த செயல்..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்ரீ ரெட்டி இந்திய சினிமாவின் ஒரு முக்கிய நடிகையாக திகழ்பவர். இவர் பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார். தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரமாக புகழ்பெற்ற இவர், தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபெற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரு காலத்தில் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி பின்னர் தமிழ் இண்டஸ்ட்ரி சென்றார். திரையுலகில் அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரபலமான ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னையில் அமைதியாக இருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக யூட்டியூப் சேனல் ஒன்றில் சமையல் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். யூட்டியூப் சேனல் வீடியோ மூலம் தனது கைவரிசையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே பலவிதமான உணவுகளை தயார் செய்துள்ள ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் மற்றொரு வீடியோ மூலம் பார்வையாளர்களை தன் வசம் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த முறை சோறு மீன் குழம்பு சமைத்துள்ளார்.சமைக்கும்போது ஸ்ரீரெட்டி பாடலை பாடினார் . அந்த பாடல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் ஸ்ரீரெட்டி தனக்கு மனிதாபிமானம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்தநிலையில் ஸ்ரீரெட்டி மீன் குழம்பு சமைத்து பல அனாதைகளுக்கு கறி வழங்கி அவர்களின் பசியைப் போக்கினார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஸ்ரீ ரெட்டிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement