• Sep 20 2024

ஸ்ரீதேவி மகள் விடுத்த எச்சரிக்கை-குவியும் பாராட்டுக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர் தி ஆர்ச்சீஸ் பாலிவுட் படம் மூலம் நடிகையாகியிருக்கிறார். ஜோயா அக்தர் இயக்கி வரும் அந்த படத்தில் குஷி தவிர்த்து ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
பெண்ணின் கரு முட்டையை விற்க சொல்லி கொடுமை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் தங்கை பற்றி ஜான்வி கபூர் தெரிவித்ததாவது…

தி ஆர்ச்சீஸ் பட ஆடிஷனுக்கு குஷி சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அந்த பட வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று ரொம்ப விரும்பினார்.

எனக்கு கலாய்ப்பவர்களை சுத்தமாக பிடிக்காது. யாராவது என் தங்கை குஷி பற்றி ஏதாவது தவறாக பேசினாலோ, கிண்டல் செய்தாலோ சும்மா விட மாட்டேன் என்றார்.

ஜான்வி ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தன் தங்கையை பாதுகாப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டுகிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை ஜான்வி நடித்திருக்கும் குட்லக் ஜெர்ரி படம் ஜூலை 29ம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் தான் குட்லக் ஜெர்ரி.மேலும் இது தவிர்த்து தோஸ்தானா 2, பவால், மிலி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார் ஜான்வி கபூர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement