• Jan 19 2025

கோபி பக்கம் உள்ள நியாயம்..? ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி! பயந்து நடுங்கிய விஜயா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் ராமமூர்த்தியின் அஸ்தியை வீட்டுக்கு கொண்டு வந்து எல்லாரும் வழிபட்ட பின்பு மீண்டும் கடற்கரையில் எடுத்த சென்று கரைத்து விடுகின்றார்கள்.

அதன் பின்பு எழிலும், செழியனும் அழுது ஒப்பாரி வைத்து இனி இந்த குடும்பத்தை நாங்கள் தான் பார்க்க வேண்டும்.  அப்பா போன பிறகு தாத்தா நிறைய சப்போட்டா இருந்தார் என ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வருகின்றார்கள்.

இன்னொரு பக்கம் கோபி  ராமமூர்த்தியின் அஸ்தியை கடற்கரையில் கரைத்து தன்னை மன்னித்து விடுமாறு கதறி அழுகிறார். மேலும் நான் எல்லாம் எனது அப்பாவின் விருப்பப்படி தான் செய்தேன். பிடிக்காத திருமணத்தை செய்தேன். பாக்கியாவை பிடிக்கவில்லை என்றாலும் பார்த்துக் கொண்டேன் ஆனால் எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை தந்தார் என புலம்புகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவும் மனோஜ்ஜூம் மொட்டை மாடியில் நின்று லெட்டரை வைத்து பயந்து கொண்டிருக்க, அங்கு வந்த ரோகிணி இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, மனோஜ் நடந்தவற்றை சொல்கிறார்.

இதை கேட்ட ரோகிணி இது யாரோ உங்களை பயமுறுத்த தான் பண்ணுகின்றார்கள் என்று மனோஜை அழைத்து செல்கின்றார். ஆனாலும் இது அந்த பிஏ வின் வேலையாக கூட இருக்கலாம் என ரோகிணி பயப்படுகின்றார்.

இதை தொடர்ந்து ரோகிணி அம்மாவையும் பையனையும் அழைத்து வருவதற்காக வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்துக் கொள்கின்றார். 


அதன் பின்பு மீனா அந்த முதியவர்களுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும் போது அவர்கள் இன்றைக்கு எங்களுக்கு ஓடர் வந்திருக்கு என்று காசு கொடுக்கின்றார். ஆனாலும் அதை வாங்க மறுக்கின்றார் .

அந்த நேரத்தில் அங்கு முத்து அவர்களுக்கு மூன்று செருப்பு தைக்க ஆர்டர் கொடுத்ததாக நிற்கின்றார். ஆனாலும் இருவரும் கணவன் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் பேசிவிட்டு வருகின்றார்கள்.

இதைத்தொடர்ந்து கார் செட்டுக்கு வந்த முத்து, அங்கு செல்வம் குடித்து விட்டு கிடைப்பதை பார்த்து என்ன நடந்தது என விசாரிக்கின்றார். அதற்கு தனது அப்பாவின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட முடியவில்லை என்று செல்வம் புலம்புகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement