• Jan 19 2025

ஒருவழியாக படத்தை முடித்துவிட்ட விஷ்ணுவர்தன்.. அடுத்தது சல்மான்கான் படம் தான்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் விஷ்ணுவரதன், ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த படத்தை கடந்த சில ஆண்டுகளாக இயக்கி வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் இந்த படத்தை ரிலீஸ் செய்தவுடன் அவர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாகவும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடிக்கும் திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் இந்தியாவின் பல இடங்களில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ என்பவர், விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்தவர் என்பதும் அதுமட்டுமின்றி இவரது மருமகன் தான் ஆகாஷ் முரளி என்பதும் குறிப்பிடத்தக்கது. 



யுவன் சங்கர் ராஜா இசையில், கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்க்கு பின் சல்மான்கான் நடிக்க இருக்கும் ‘தி புல்’ என்ற படத்தை விஷ்ணுவர்தன் இயக்க  இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement