• Aug 29 2024

விஷ்ணு விஷால் காட்டில் மாம்பழ சீசன்.. ‘பேச்சுலர்’ இயக்குனர் போட்டு கொடுத்த ஸ்கெட்ச்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பொதுவாக ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டால் அவரது காட்டில் மழை என்று கூறுவார்கள், ஆனால் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் காட்டில் மாம்பழம் கொட்டுகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் அடுத்த திரைப்படத்தை தயாரிப்பது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் என்றும் இந்த படத்தின் டைட்டில் ’ஒரு மாம்பழ சீசனில்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சுலர்’ என்ற படத்தை இயக்கிய சதீஷ்  செல்வகுமார் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement