• Jan 15 2025

விஷாலுக்கு மெச்சூரிட்டி இல்ல.. பாதிக்கப்பட்ட எனக்கு நடிகர் சங்கம் என்ன செய்தது? விசித்ரா கேள்வி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் தமக்கு ஏற்பட்ட உடல் ரீதியான தொல்லைகள் தொடர்பில் பல நடிகைகளும் தைரியமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் பதவி விலகினார். அவருடனையே செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் 17 பேரும் மொத்தமாக ராஜனமாக செய்தார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த விவகாரத்தில் கேரளா நடிகர்கள் சங்கம் பெண்களுக்கு பாதுகாப்பு தர தவறி இருப்பதாக கமிஷன் அறிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமா பக்கமும் புயலைக் கிளப்பி வருகின்றது.

இது தொடர்பாக பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆன விஷால், இதற்காக பத்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்போம் என்று கூறினார். மேலும் இதைப்போன்று யாராவது நடந்து கொண்டால் தைரியமாக செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

நடிகர் விஷாலின் இந்த பதிவிற்கு ஸ்ரீ ரெட்டி அவர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மிகவும்  அவமானப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தார். ஸ்ரீ ரெட்டி பகிர்ந்த இந்த போஸ்ட் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகை விசித்ரா தனக்கு நடந்த பா.சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகவே பேசி இருந்தார். மேலும் இது தொடர்பில் தென் இந்திய நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே புகார் அளித்ததாகவும் அது தொடர்பில் ஒரு விசாரணை கூட நடத்தப்படவில்லை என்றும் தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் எனக்கு ஆதரவாக பேசவில்லை. எனக்கு நேர்ந்ததை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினேன். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்களை விசாரிக்க கேரளாவை போல தமிழ்நாட்டிலும் கமிட்டி வேண்டும். அந்த கமிட்டி வெறும் கண் துடைப்பாக இருக்கக் கூடாது. அதில் வலுவான தலைவர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

அது மட்டும் இன்றி விஷால் ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். அவர் இப்படியான மெச்சூரிட்டி இல்லாத பதிலை சொல்லி இருக்கக் கூடாது. நாங்கள் செருப்பு கழட்டி அடிக்க தயார் அவர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

Advertisement