• May 20 2024

புதிய காருடன் வந்த நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால் - உறைந்து போன ரசிகன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஷால். இவரின் ரசிகரும் புதுமுக நடிகருமான சோமு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.எனவே புதுக் காரை வாங்கி விஷாலிடம் காண்பித்து ஆசி பெற வேண்டும் என ஆசைப்பட்டார்.தனது ஆசையை விஷால் அவர்களின்  மேனேஜர் ஆன ஹரிகிருஷ்ணன்  அவர்களிடம் தெரிவித்தார்.


உடனே  ஹரிகிருஷ்ணன் இதை விஷால் அவர்களிடம் கூற தனது பிசியான பணிகளுக்கு இடையே விஷால் தனது இல்லத்திலிருந்து வெளியே  வந்து  ரசிகனும் புதுமுக நடிகருமான சோமுவின் காரை பார்த்தார். புது காரை பார்த்து விட்டு வெறும் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு அனுப்பி விடுவார் என்று நினைத்த சோமுவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.


விஷால் சோமுவின் ஆசைக்கு ஏற்ப அந்த காரின் சாவியை வாங்கி காரினுள் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து சற்று ஓட்டியும் பார்த்தார். காரை ஓட்டி பார்த்தது மட்டும் இல்லாமல் வெளியே இறங்கி வந்து சோமுவுக்கு ஆல் த பெஸ்ட் என்று கூறிவிட்டு தனது ஜாகுவார் காரில் ஏறி சென்று விட்டாராம்.


விஷால் தான் ரசிக்கும் ஒரு ஹீரோவை  தான் அண்ணனாக நினைக்கும் ஒரு கதாநாயகனை வெறும் பார்த்துவிட்டு புதிய காரை காண்பித்துவிட்டு செல்லலாம் என்று வந்த சோமுவுக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதுபோன்று தன்னைத் தேடி வந்த ரசிகனை மதிக்க தெரிந்த ஹீரோக்கள் மிகவும் குறைவு அந்த விதத்தில் விஷால் வேற லெவல் என புகழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement