• May 20 2024

விஜய்யின் 'லியோ' இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்... படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஏற்கனவே விஜய் பிறந்தநாளில் 'நான் ரெடி' என ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு அதிரடி காட்டியது படக்குழு.


அதன் தொடர்ச்சியாக விரைவில் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள லியோ அக்டோபரில் வெளியாகிறது. இந்த படம் கோலிவுட்டின் மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர் என பெரும் நட்ச்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் விஜய் பிறந்தநாளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாளில் அவர்களது க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


ஆனால், திடீரென இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி மலேசியாவில் நடக்கவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த முடிவை விஜய் தான் எடுத்துள்ளதாகவும் லியோ டீமில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை தெரியவில்லையாம்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement