• Sep 22 2023

பிணம் போல் கிடந்தேன்.. மார்பை அழுத்திய டான்ஸர்.. கண் கலங்கிய சீரியல் நடிகை சந்தியா!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை சந்தியா வீட்டிலேயே பல நாய்களை வளர்த்து வரும், இவர், தெருவில் உள்ள நாய்களுக்கும் தன்னால் முடிந்த அளவு பாதுகாப்பு கொடுத்து பராமரித்து வருகிறார்.

 இந்நிலையில்,பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள சந்தியா, பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், செல்லமடி நீ எனக்கு சீரியல் டைட்டில் பாடல் படமாக்கப்பட்ட போது அங்குள்ள கோயில் யானையுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது யானை திடீரென்று தாக்கி கீழே தள்ளிவிட்டு, தும்பிக்கையால் என்னை தாக்கியதில், சுயநினைவை இழந்துவிட்டேன்.


அந்த நேரம் நான் சாவைப் பார்த்துவிட்டு வந்தேன், நான் பிழைப்பேன் என்று நினைக்கவே இல்லை. அந்த நேரத்தில் நான் பிணம் போல அசைவு எதுவும் இல்லாமல் இருந்தேன், அங்கிருந்த டான்ஸர்கள் என்னை காப்பாற்றி தூக்கி சென்றார்கள். அந்த நேரத்தில் கூட, ஒரு டான்ஸர் என் மார்பை பிடித்து அழுத்தினார். அந்த நேரம் நான் பிணம் போல இருந்தேன் அப்போதுக்கூட அந்த டான்ஸர் அப்படி செய்தார். அந்த டான்ஸர் யார் என்று கண் கலங்கினார்.

என் வாழ்க்கையில் நடந்த இந்த மோசமான அனுபவத்தை நான் எந்த இன்டர்வியூவிலும் சொல்லியது இல்லை, ஏன் என் அம்மாவிடம் கூட சொல்லியது இல்லை. விலங்குகளைவிட மனிதர்கள் மிகவும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அவர்களைப் பார்த்துத்தான் நாம் பயப்பட வேண்டும். இந்த விபத்தில் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சில உறுப்புகள் அகற்றப்பட்டது.


அப்புறம் கொஞ்சம் நாள் கழித்து, குற்றம் நடந்தது என்ன நிகழ்ச்சியில் யானையால் தான் தாக்கப்பட்டது குறித்து செய்தி போட்டார்கள். அப்போது அந்த செய்தியாளர், அந்த நடிகை அணிந்திருந்த ஆடையின் நிறம் யானைக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் என்றும், வாசனை திரவியம் பிடிக்காமல் போயிருக்கலாம் என்றார்கள்.

மேலும், என் மாதவிடாய் காலத்தில் யானை என்னை மிதித்து விட்டதாக வாய்க்கு வந்த விஷயத்தை எல்லாம் தெரிந்தது போல பேசினார்கள். நான் மாதவிடாயாக இருந்தேன் என்று அவர்களுக்கு எப்படி தெரியும், நான் சொன்னால் தானே எது உண்மை, எது பொய் என்று தெரியும் என நடிகை சந்தியா, இத்தனை நாள் மனதில் இருந்த கவலையை கண்ணீருடன் கூறி இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement