• Jun 02 2024

மனோஜ் கட்டிய தாலியை கண்ணில் ஒத்திக் கொண்ட புதுப் பொண்டாட்டி! அடுத்த ட்விஸ்ட் இது தானா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி சீரியல்களையே பின்னுக்கு தள்ளி படிப்படியாக முன்னேறிக்  கொண்டே செல்லும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியலையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.

இவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல்  எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

தற்போது இந்த சீரியலை மனோஜ் தேடிக்கொண்டிருக்கும் தனது ஓடிப்போன காதலி ஜீவா, அவரின் கையில் வசமாக சிக்குகிறார். மேலும் அவரை போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து விசாரிக்கும் போது அவர் பணத்தை தர முடியாது என சொல்லுகிறார். இதனால் மனோஜ் அந்த 27 லட்சத்தையும் எவ்வாறு வாங்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்த நிலையில்,  தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவ் விஜய் டிவி பிரபலத்துடன் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


குறித்த வீடியோவில் பெண்ணுக்கு தாலி கட்டி இருப்பது போலவும் அவரின் முன் முகத்தை காட்டாமல் சப்ரைஸ் ஆக இறுதியாக காட்டியுள்ளார். இதனால் இந்த காணொளியை முதலில் பார்த்த ரசிகர்கள், அப்போ ரோகிணியும் இல்ல ஜீவாவும் இல்லாமல் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டாரா மனோஜ் என கேள்விகளை எழுப்ப தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, நாளைய எபிசோடில் ரோகிணியின் பார்லருக்கு ஜீவாவை முத்து கூட்டிப் போகிறார். அங்கு ஜீவாவை பார்த்த ரோகிணி, உங்க பெயர் என்ன என கேட்க, அவரும் ஜீவா என்று சொல்லுகிறார். அதன்பின் மனோஜை ரகசியமாக அழைக்கிறார். 


Advertisement

Advertisement