• Jul 27 2024

அந்தமானில் ஆட்டம் போட தயாரான கார்த்திக் சுப்புராஜ்.. ‘சூர்யா 44’ படத்தின் ஒரு நிமிட வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்காக சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் அனைவரும் அந்தமான் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்தமானில் இந்த படப்பிடிப்பு ஏற்பாடு நடைபெறும் ஒரு நிமிட வீடியோவை சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தமானில் அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான செட் அமைக்கும் பணி மற்றும் சில ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலும் கசிந்து வருகிறது.



இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இரண்டு பிரபல மலையாள நடிகர்கள் இந்த படத்தில் வில்லன்களாகவும் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பணிபுரிய உள்ள ஒளிப்பதிவாளர் உள்பட ஐந்து பிரபலங்களின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இணையும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement