• Jan 19 2025

விஜே பார்வதிக்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை பார்ப்பது யார் தெரியுமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் பார்வதிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவருக்காக தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

யூடியூபில் பொதுமக்களிடம் ஜாலியான கேள்வி கேட்கும் விஜேவாக அறிமுகமான பார்வதி ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக வந்துள்ளார் என்பதும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ’நூறு கோடி வானவில்’ ’சிவகுமாரின் சபதம்’ ’கருங்காப்பியம்’ உட்பட சில படங்களில் அவர் நடித்துள்ளார். இவரது பிராங்க் வீடியோக்கள் பிரபலம் என்பதும் தனியார் நிறுவனம் ஒன்றுக்காக இவர் தொகுத்து வழங்கும் வீடியோ மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜே பார்வதிக்கு தற்போது 29 வயதாகும் நிலையில் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை அவரது வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது பெயர் பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த நிறுவனம்தான் விஜே பார்வதிக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வருட இறுதிக்குள் விஜே பார்வதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே அவரது திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement