• Jul 27 2024

லட்சுமிய காணும்.. லட்சுமிய காணும்.. பைத்தியமாகவே மாறிவிட்டாரா விஜய் சேதுபதி? அதிர்ச்சி வீடியோ.!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லர் முதல் பார்வையிலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது.

குறிப்பாக இந்த ட்ரெய்லரில் ’லட்சுமிய காணும் லட்சுமிய காணும்’ என்று திரும்பத் திரும்ப விஜய் சேதுபதி கூறுவதும் அவர் எதை காணும் என்று சொல்கிறார் என புரியாமல் காவல்துறையினர் குழப்பத்தில் இருப்பதுமான காட்சிகள் உள்ளன.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மனநலம் குன்றியவராக நடித்திருப்பாரோ என்று டிரைலரில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது புரிய முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்பதும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், பாரதிராஜா, அபிராமி, சிங்கம் புலி, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement