• Jul 27 2024

காவியுடையில் ரஜனிகாந்த்! வைரலாகும் சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழுலகத்தில் அறிமுகம் தேவையில்லா ஒரு சிலரில் முதன்மையானவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த்.தற்போது இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர் வெற்றி படங்களை தந்துகொண்டிருக்கும் ரஜனிகாந்தை ஓய்விற்கு அனுமதிக்கிறார்கள் இல்லை அவரது பெரும் ரசிகர் படை.


கடந்த வாரங்களில் சூப்பர் ஸ்டாரின் 170 வது படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் ஓய்விற்காக சூப்பர் ஸ்டார் ஓய்வுக்காக கடந்த வாரமளவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு சென்றிருந்தார்.


இதனை தொடர்ந்தே அவர் சமீபத்தில் ஆன்மீக பயணமாக இமயமலை செல்லப்போவதாக கூறியிருந்தார். வழக்கமாகவே இவர் செல்லும் இடம் என்பதால் தற்போது  அவர் அங்கு சென்று எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது . இது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.  


Advertisement

Advertisement