• Jan 19 2025

உன்னை என் படத்தில் பாட வைக்கிறேன்.. சூப்பர் சிங்கர் பாடகருக்கு உத்தரவாதம் கொடுத்த சீன் ரோல்டன்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீசன் மிகப்பெரிய அளவில் மற்ற சீசன்கள் போலவே பிரபலமாகி வருகிறது என்பதும் தெரிந்தது.

பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகி சுஜாதா மோகன் மற்றும் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாக இருக்கும் இந்த சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வார எபிசோடு முன்னோட்ட வீடியோ வெளியான நிலையில் அதில் இந்த வாரம்   நடிகர் மோகன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்த முன்னோட்ட வீடியோவில் போட்டியாளர் ஒருவர் பாடி கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவரை பாராட்டி, ’என்னுடைய இசையில் நீங்கள் கண்டிப்பாக பாடுகிறீர்கள், அந்த பாடல் நிச்சயம் ஹிட் ஆகும் என்றும் உத்தரவாதம் கொடுத்தார்.

இதனை அடுத்து மோகன் பேசும்போது ஒரு ஆடியன்ஸாக இங்கே இருந்து உங்கள் பாடலை பார்க்கும்போது மிகவும் அருமையாக உள்ளது என்றும் ஒரு ஆடியன்ஸாக உங்களை நான் வாழ்த்துகிறேன் என்றும் கூறினார். இதனை அடுத்து அனுராதா ஸ்ரீராம் அந்த போட்டியாளரை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லும் காட்சியுடன் இந்த முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ போட்டியாளர்கள் திரையுலகில் பாடல்களை பாடும் வாய்ப்புகளை பெற்று பிரபலம் ஆகி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக இன்னொரு போட்டியாளருக்கும் திரை உலகில் பாட வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பது சந்தோஷமே.


Advertisement

Advertisement