• Jan 19 2025

நடிகர் சூரி நடித்த கருடன் படத்தின் முதல் விமர்சனம்..! பாசிட்டிவா? நெகடிவா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூரியின் ரேஞ்சே மாறிடுச்சு. அதற்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார்.

நடிகர் சூரி நடிப்பில் அடுத்து திரைக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் தான் கருடன். இந்த படத்தில் நடிகர் சூரியுடன், சசிகுமார் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.


இந்த நிலையில், கருடன் பட ரிலீஸுக்கு முன் படத்தை பார்த்தவர்கள் தமது விமர்சனங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

அதன்படி கருடன் படம் சிறந்த ஆக்சன் டிராமா திரைப்படமாக உள்ளதோடு வலுவான எமோஷனல் மற்றும் வெறித்தனமான ஆக்சன் பாணியில் உருவாகியுள்ளதாம் . மேலும் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனின் கேரக்டர்கள் சிறப்பாக காணப்படுவதோடு இடைவெளிக்கு பிறகு வரும் காட்சிகள், ஃப்ரீ  கிளைமாக்ஸ் மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் சூரியின் சம்பவம் என்பன சிறப்பாக உள்ளதாக தற்பொழுது விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement