• Jan 19 2025

கவின் நிலைமை இவ்வளவு அம்சமா மாறிடுச்சே..!! நயனுக்கு ஜோடியாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் நடிகர் கவினுக்கு நிகர் கவின் தான் எனும் அளவிற்கு, படிப்படியாக தனது உழைப்பையும் திறமையையும் நம்பி முன்னுக்கு வந்த நடிகர்களுள் இவரும் ஒரு ஸ்டாராக தற்போது திகழ்கிறார்.

சின்னத்திரையில் சீரியல் நடிகராக இருந்து அதற்குப் பிறகு பிக்பாஸ்ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட கவினுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத்  தொடங்கின. ஆனாலும் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கவின் நடித்த படங்களில் டாடா திரைப்படம் இவரது வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரு படமாக காணப்படுகிறது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதை அடுத்து கவின் வசம் அநேகமான படங்கள் காணப்பட்டன.


கவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஸ்டார். இந்த படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதும் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. ஆனாலும் கவினுக்கு பட வாய்ப்புகளுக்கு குறைவில்லாமல்அவர் வச ம் தற்போது நான்கு படங்கள் உள்ளனவாம்.

அதன்படி நெல்சன் தயாரிப்பில்  பிளெடி பெக்கர் என்ற படத்திலும், நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் படத்திலும், வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளாராம். அந்த படத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றாராம்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கும்  படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். 

இந்த நிலையில், குறித்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கவினுக்கு  8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவின் இறுதியாக நடித்த ஸ்டார் படத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது வயதில் மூத்த நடிகையான நயன்தாராவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு கவின் எட்டு கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement