பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை எட்டியுள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இம்முறை கலந்துகொண்ட போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்கவில்லை என்றும் ரசிகர்களை என்டர்டைமன்ட் பண்ண வில்லை என்றும் தொடர்ச்சியாக நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து தொடர்ச்சியாக 8 சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் கடந்த வருடம் இடம்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு மிகவும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் காணப்பட்டது.
d_i_a
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்த போதும் சுவாரஸ்யம் அற்றதாக காணப்பட்டதோடு தொடர்ச்சியாக தமிழ் ரசிகர்களை இந்த சீசன் இழந்து வருகின்றது. அது மட்டும் இன்றி பிக் பாஸ் வரலாற்றிலேயே மீம்ஸ் போட்டு கலாய்க்க தகுதி இல்லாத ஒரு சீசன் என இதனை இணையவாசிகள் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமான சனம் செட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு கண்ணாடி போட்ட விஜய் சேதுபதிக்கு கண்ணு தெரியவில்லையா? தொடர்ச்சியாக மஞ்சரியை டார்க்கெட் செய்து வருகின்றீர்கள். ஆனால் மக்களுடைய ஆதரவும் என்னுடைய சப்போட்டும் மஞ்சரிக்கு தான் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Listen News!