• Dec 12 2024

"ராஜா சாப்" படம் அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்... குஷியில் குதிக்கும் ரசிகர்கள்..

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா மட்டும்தான் என்ற பிம்பத்தை உடைத்த நடிகரில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் பிரபாஸ்க்கு முக்கிய இடம் உண்டு. அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் ராஜா சாப். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக பிரபாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.


இந்நிலையில் படம் குறித்து படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார். ராஜா சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், "ஹாரர் தான் புதிய நகைச்சுவை" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் இருந்தார்.


கையில் சுருட்டுடன் காணப்படும் அவர் பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். இந்தப் படம் திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தினை மாருதி இயக்குகின்றார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, ராஜா சாப் படம் குறித்து அப்டேட் கொடுத்தார்.


அதாவது, " ராஜா சாப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் சிறப்பாக வந்துகொண்டு உள்ளது. மேலும் எனக்குப் பிடித்த பிரபாஸ் இந்தப் படத்தில் உள்ளார். ராஜா சாப் எனது முதல் தெலுங்கு படம் என்பதால் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பிரபாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. 


Advertisement

Advertisement