• Nov 06 2024

தயவுசெய்து என் காதலை பிரித்து விடாதீர்கள்.. வெற்றிமாறனுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய காதல் காட்சிகளை கட் செய்து விட வேண்டாம் என இயக்குனர் வெற்றிமாறனுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அவருடைய 50வது படமான இந்த படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை 2’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 20 நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

’விடுதலை’ முதல் பாகத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் ஜோடி இல்லாமல் தனியாக வந்த விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் அவருக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருப்பதாகவும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகள், அவரது குடும்ப சூழ்நிலை, அவர் தீவிரவாதியாக மாறியது எதனால் போன்ற காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவருக்கும் இடையே அழகான லவ் போர்ஷன் இருப்பதாகவும் இப்படி ஒரு ரொமான்ஸ் காட்சியில் தான் இதுவரை நடித்ததில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி கூறிய நிலையில் ஒருவேளை படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சிகளை இயக்குனர் வெற்றிமாறன் கட் செய்து விடக்கூடாது என்பதை அவரிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியை ரொமான்ஸ் நாயகனாக பார்த்து அதிக நாட்கள் ஆகிறது என்பதால் இந்த காட்சியை பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருப்பதால், வெற்றிமாறன் அந்த காட்சிகளை படத்தில் வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement