• Sep 29 2024

ரூ.100 கோடி வசூலை நெருங்கியது ‘மகாராஜா’.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் முதல் நாளிலேயே பத்து கோடி ரூபாய் வசூல் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக ’மகாராஜா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது 10 நாட்களில் இந்த படம் மொத்தம் 81.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  

இன்னும் சில திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சியாக ஓடிக் கொண்டிருப்பதால் சில நாட்களில் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

அநேகமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் முதல் படமாக ’மகாராஜா’ படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த  சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் திருப்திகரமான வசூலை தராத நிலையில் ’மகாராஜா’ வெற்றி அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement