பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ’பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் வெளிநாடுகளில் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய் தேவரகொண்டா மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவான திரைப்படம் ’பேமிலி ஸ்டார்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் பரசுராம் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையில் உருவான இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே விஜய் தேவர் கொண்டா நடித்த ’லைகர்’ ’குஷி’ ஆகிய திரைப்படங்கள் சுமாரான வெற்றியை தான் பெற்ற நிலையில் இந்த படம் வெற்றி பெற்றால் தான் அவருக்கு மார்க்கெட் உயரும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் நேற்று நள்ளிரவே முதல் காட்சி ஆரம்பமான நிலையில் முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 80களில் வரும் பழைய கதையாக இருக்கிறது என்றும் கதை சொல்லும் விதமும் மிகவும் சலிப்பாகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட வொர்க்-அவுட் ஆகவில்லை என்றும் இரண்டு பாடல்கள், இன்டர்வெல் காட்சி மற்றும் ஒரு சில காட்சிகளை தவிர மூன்று மணிநேர படம் சுத்த வேஸ்ட் என்றும் எமோஷனல் சுத்தமாக இல்லை என்றும் படம் பார்த்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பெங்களூரில் காலை ஐந்து மணிக்கு இந்த படத்தின் காட்சிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில் இடைவேளை வரை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது ஏமாற்றத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த படமும் தோல்வி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
#FamilyStar - CRINGE Star!🙏
Highly outdated 80s style of story & Mega Boring narration with Silly Scenes. VD-Mrunal No Chemistry. 2 Songs, Interval block & couple of fun scenes r gud in this close to 3Hrs running lengthy film. Zero Emotional Connect. WORST!
Listen News!