• May 16 2026

ஜிவி பிரகாஷுக்கு குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. ஏப்ரல் 12ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் நடித்த ’டியர்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசரில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும் இந்த டீசரில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பின்னணி குரல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் நேற்று ’கள்வன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த இன்னொரு திரைப்படமான ’டியர்’ என்ற திரைப்படம்  ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’டியர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லர் பின்னணி குரல் கொடுத்துள்ளவர் பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல்  சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’டியர்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையும் அமைத்துள்ளார். ஒரு ஜாலியான குடும்ப படமாகவும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ஜிவி பிரகாஷ்க்கு இன்னொரு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement