• Oct 16 2024

ரத்தம் படத்தின் புதிய பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சி.எஸ்.அமுதன் தயாரிப்பில் நடிகர் விஜய் ஆண்டணி நடித்திருக்கும் திரைப்படம் 'ரத்தம் '. இதன் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பாக விஜய் ஆண்டனி தனது  டுவிட்டர் பக்கத்தில் '' நாளை மாலை 5 மணிக்கு ரத்தம் ட்ரெய்லர்  ரிலீஸ் செய்யப்படும் எதிர்பாருங்கள் '  என போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். தற்போது இன்னும் ஒரு போஸ்ட் பதிவுசெய்துள்ளார். 

விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியாரும் நடித்துளார். மேலும்  ரம்யா நம்பேசன், நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார் ஆகிய மூன்று முன்னணி நடிகைகளுடன், துணை நடிகர்கள்  பலரும் நடித்திருக்கின்றனர். 

படத்தின் டீசர் வெளியாகி  ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்றபை பெற்றது .இந்நிலையில் ரத்தம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் என ரத்தம் படத்திக்கான போஸ்டர் ஒன்றை விஜய் ஆண்டனி டுவிட்டர்  தளத்தில் பதிவிட்டிடுந்தார்.


 மேலும் தற்போது ரிலீஸ் செய்வதட்கான ஏற்பாடுகள் செய்யும் இடத்தில் இருந்து குடை ஒன்றை பிடித்துக்கொண்டுநிற்பது போன்ற படத்தை டுவிட்டரில் பதிவு செய்து . ' ரெய்ன் ரெய்ங் கோ அவே... ' என்று ஒரு ஆங்கில பாடலை பதிவு செய்துள்ளார்.

அவரின் பதிவை பார்த்து விஜய் ஆண்டனி ரசிகர்கள் தொடர்ந்து கமென்ஸ் செய்தவண்ணம் இருக்கின்றனர்.மேலும் அவரின் ரத்தம் படத்தின் ட்ரெய்லருக்கு காத்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளனர்.'' ரத்தம்'' திரைப்படம் எல்லோருடைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் செப்டெம்பர் 28 -ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.


















Advertisement