தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரவி மோகன் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில், 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவி மோகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு திடீரென தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு நெருக்கம் இருப்பதாகவும், இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகக் காணப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த சூழலில், ரவி மோகன் சமீபத்தில் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அதில், “இத்தனை நாட்கள் நான் அமைதியாக இருந்ததால் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். நான் சாது போல இருந்ததால் என்னை சீண்ட முயற்சிக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் விவாகரத்து முடியும் வரை எந்த புதிய திரைப்படங்களிலும் நடிக்க மாட்டேன்.” என அவர் கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்து ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி வருகிறது.
Listen News!