• Jan 15 2025

நடிகர் ரஞ்சித் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி போலீசில் புகார் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஞ்சித்தின் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 9ஆம் திகதி வெளியாகியிருந்தது 'கவுண்டம்பாளையம்' திரைப்படம்.படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் பின் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்ட நடிகர் ரஞ்சித் இப் படம் காதலுக்கு எதிரான படமன்று நாடக காதலுக்கு எதிரான படம் என தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார்.

நடிகர் ரஞ்சித்தின் "கவுண்டம்பாளையம்" படத்தின் பாடல்கள் & டிரெய்லர்  வெளியீட்டு விழா

இந்நிலையில் நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நடிகர் ரஞ்சித்திற்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.குறித்த புகாரில் ‘கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கிற வகையில் பல்வேறு காட்சிகளை கொண்டிருக்கிறது" எனவும் 


ட்ரைலர் வெளியீட்டின் பின் இதுதொடர்பாக காவல்துறை டிஜிபியிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்ததாகவும்  மேலும் திரைப்பட தணிக்கை குழுவிடமும் புகார் அளித்திருந்தாகவும் குறிப்பிடத்துடன்,கடந்த 10 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பில் ரஞ்சித் ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் வகையில் அதனை நியாப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தார்.இது சமூக நீதிக்கு எதிரான பேச்சு கண்டிக்கப்படவேண்டியது என குறிப்பிட்டிருந்தார் வன்னியரசு. 

Advertisement

Advertisement