• May 19 2024

வாரிசு படத்தின் அப்டேட் இன்று வெளியாகுமா?- இப்படி ஒரு ஸ்பெஷல் நாளா இன்று?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான விஜய் தற்பொழுது தனது 66 படத்தில் நடித்து வருகின்றார்.இவரின் இந்த படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் என்பன விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

தற்போது வரை இந்த போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படம் 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்ட ஷுட்டிங் எங்கு, எப்போது துவங்கப்படும் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் செம ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பலரிடமும் இன்று வாரிசு அப்டேட் வருமா என்றும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

இதனால் இணையதளவாசிகள் இன்று அப்படி என்ன ஸ்பெஷல்…இன்று எதற்காக விஜய்யின் வாரிசு பட அப்பேட் வரணும் என சந்தேகமாக கேட்டு வருகின்றனர். ஆனால் வாரிசு பட டைரக்டர் வம்சியின் பிறந்த நாள் இன்று. அதனால் தான் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். தெலுங்கில் முன்னணி டைரக்டராக இருக்கும் வம்சி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement