• May 19 2024

வனிதா விஜயகுமாரின் மகளா இது...? என்ன மாதிரி வளர்ந்திட்டாங்க... அம்மாவை மிஞ்சிடுவாங்க போல இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். தந்தையை போலவே இவரும் சினிமாவில் கால் பதித்திருக்கின்றார். அந்தவகையில் 'சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பல பிரபலங்களின் படங்களையும் தயாரித்திருந்தார். 


மேலும் தனது தந்தையுடனான குடும்ப பிரச்சனையில் சிக்கி சர்ச்சைகளை கிளப்பிய வனிதா தற்போது அவர்களை பிரிந்து தனியாகவே தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். அத்தோடு கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மகள் ஜெனிதாவை கடத்தி வந்ததாக வனிதாவின் முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் பேரில் தெலங்கானா போலீஸார் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து வனிதாவிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர் தன்னை யாரும் கடத்தி வரவில்லை என்றும் முழு விருப்பத்துடன் தாயுடன் வந்ததாக அவரது மகள் ஜெனிதா வாக்குமூலம் அளித்தார்.


இதனைத் தொடர்ந்து ஜோவிகா விஜயகுமார் மற்றும் ஜெனிதாவுடன் இணைந்து வசித்து வந்த வனிதா, மூன்றாவது முறையாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக பிரிந்தனர்.


இந்நிலையில் தற்போது தனது பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார் வனிதா. அது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அவர்களுடன் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றார். அந்தவகையில் தனது இரண்டாவது மகளுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது தன்னுடைய மகள் வெகு சீக்கிரமாக வளர்ந்து வருவதாகவும் அப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.


நடிகை வனிதா தனது மகளுடன் எடுத்த இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement