• May 07 2024

பிரபல நாட்டின் இரண்டு தெருக்களிற்கு ஏ.அர்.ரகுமானின் பெயர் -ஏன் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்தினைத் தொடர்ந்து ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றார். அத்தோடு கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.



கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தான் இசையமைத்த அனைத்து பாடல்களையும் ஹிட் பாடல்களாக கொடுத்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவரின் இசைக்காக மட்டுமல்லாமல் அவரின் குணத்திற்காகவும் அவரை ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.



அதன்படி தமிழில் அடுத்தடுத்து அவரின் இசையில் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. வெந்து தணிந்தது காடு, கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது

இந்நிலையில் தற்போது கனடா நாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை கௌரவிக்கும் வகையில் Markham என்ற நகரத்திலுள்ள இரண்டு தெருக்களுக்கு ரகுமானின் பெயரை வைத்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு தெருவிற்கும் 2022 ஆம் ஆண்டு ஒரு தெருவிற்கு அவரின் பெயரை வைத்து கௌரவித்துள்ளனர்.    




Advertisement

Advertisement

Advertisement