• May 10 2024

வடிவேலு படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு வரவில்லை-நடிகர் ராஜ்கிரண் கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் ராஜ்கிரண் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே . இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்ததோடு கஸ்தூரிராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் வடிவேலுவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜ்கிரண் இப்படம் குறித்து ஓர் பேட்டியில் பேசியிருந்தார். அதில் கூறும்போது வடிவேலுவுக்கு இப்படத்தில் எப்படி நடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்பது பற்றிக் கூறியுள்ளார். அதாவது வடிவேலு தானாக வந்து வாய்ப்பு கேட்கவில்லை, நான் தயாரிப்பாளராக இருக்கும் பொழுது எனக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள்.

ஒரு ரசிகரின் திருமண சமயத்தில், நீங்கள் திருமணம் நடத்தி வைத்தால் மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். அதனால் அவரது திருமணத்திற்கு நான் மதுரைக்கு சென்று இருந்தேன். காலை திருமணம் முடிந்த பிறகு, அன்று இரவு தான் எனக்கு ட்ரெயின். இரவு ட்ரெயின் ஏறும் வரை உங்களுக்கு துணையாக ஒருவரை இருக்க சொல்கிறேன் என்று துணைக்கு அனுப்பினார். அப்படி துணைக்கு இருக்க வந்த பையன் தான் வடிவேலு.

சினிமாவில் நடிக்க அவரும் என்னிடம் வாய்ப்பு கேட்கவில்லை, எனக்கும் அது பற்றி எந்த ஒரு யோசனையும் இல்லை. நேரம் செலவழிக்கவே நான் வடிவேலுவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.இந்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து நான், என் ராசாவின் மனசிலே படத்தை தயாரிக்கும் சமயத்தில். ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு ஆள் தேவைப்பட போது எனக்கு வடிவேலுவின் ஞாபகம் வந்தது. மீண்டும் அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், அப்போது திருமணமான என் ரசிகர் எனக்கு அனுப்பிய கடிதங்களை எடுத்து பார்க்க சொல்லி என் ஆபீஸில் இருபவரிடம் சொன்னேன்.

அந்த சமயத்தில் பல ரசிகர்கள் எனக்கு கடிதங்கள் அனுப்புவார்கள், ஆனால் அவர் மட்டுமே கடிதத்தில் சீல் அடித்து அனுப்பி இருப்பார். அந்த சீலில் தொலைபேசி எண் இருக்கும் அதை எடுத்து அவரை அழைத்து பேசி காலையில் திண்டுக்கல்லுக்கு ஷூட்டிங்கிற்கு வரச் சொல்ல சொன்னேன். அப்பொழுது நடிக்க வந்தவர் தான் நடிகர் வடிவேலு.என் ராசாவின் மனசிலே படத்தில் கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்க்கும் நபராக வடிவேல் நடித்திருப்பார். அதே படத்தில் கவுண்டமணியிடம் அடிவாங்கும் ஒரு சீனிலும் நடித்திருப்பார் வடிவேலு. இதுவே இவருக்கு முதல் படமாக அமைந்தது அதன் பிறகு பல படங்களில் நடித்து இன்று முன்னணி காமெடியன்களில் ஒருவராக உள்ளார் வடிவேலு என்று தனது சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
  2. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement