• May 08 2024

சென்டிமென்ட் தேதியில் ரிலீஸ் ஆகவுள்ள ஏகே 61 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர்- அஜித் இப்படி ஒரு சத்தியம் செய்தாரா ?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஏகே 61 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித் தற்பொழுது ஐரோப்பாவிற்கு டூர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அத்தோடு ஐரோப்பாவில் அஜித் மாஸ் லுக்கில் வலம் வருகின்றார்.

இம்மாத இறுதியில தான் அஜித் இந்தியா திரும்ப உள்ளாராம். அதனைத் தொடர்ந்து புனேவில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்று நடிக்க போகிறார்களாம்.

புனேவை தொடர்ந்து சென்னையிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தின் 80 சதவீதம் வேலைகள் முடிக்கப்பட்டு விட்டதால் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பருக்கு ரிலீசை தள்ளி வைத்துள்ளார்களாம்.

கிறிஸ்துமஸ் வார இறுதி நாளில் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம். இதனால் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படலாம் என தகவல் பரவி வருகின்றது. அதன்படி தற்பொழுது வெளியாகிய புதிய தகவல் என்ன வென்றால் ஆகஸ்ட் 13 ம் தேதி தான் மறைந்த தனது மனைவியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள்.

அஜித்திற்கும் ஸ்ரீதேவி மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால் தான் ஸ்ரீதேவி கேட்டதும் அவரின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தாராம். ஸ்ரீதேவியின் மறைவிற்கு முன் போனி கபூர் தயாரிப்பில் 3 படங்களில் நடிப்பதாக அஜித், ஸ்ரீதேவிக்கு வாக்குறுதி அளித்தாராம். அதை காப்பாற்ற தான் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 ஆகிய படங்களில் நடிக்க கையெழுத்திட்டாராம்.

மனைவி மீதான பாசம் காரணமாக தான் ஸ்ரீதேவியின் இறந்த நாளான பிப்ரவரி 24 அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்தாராம் போனி கபூர். தற்போதும் மனைவி சென்டிமென்ட் காரணமாக தான் ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி மீதான மரியாதை காரணமாக அஜித்தும் போனி கபூரின் இந்த சென்டிமென்ட் தேதியில் டைட்டிலை ரிலீஸ் செய்ய ஓகே சொல்லி விட்டாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
  2. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement